பல வருடங்களாக மோசமான நிலையில் இருந்த இலங்கையின் பொருளாதாரத்திற்கு பல்வேறு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் காலத்தில் சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பேராசிரியர் ரொஹான் சமரஜீவ கூறுகிறார்.


கடந்த 24 மணித்தியலாங்களில் 36,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டொன் டீசல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு பாராளுமன்றத்தில் கோருவதற்கான சாத்தியக்கூறுகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது நிரந்தர அரசியல் தீர்வுக்கான காலவரையறையை ஏற்றுக் கொண்டாலே அரசியல் ஆட்சி மாற்றங்களில் கரிசனை கொள்ள முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.


பாராளுமன்றில், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை குறித்து இன்றும், நாளையும் இருநாள் விவாதம் இடம்பெறவுள்ளது.


சட்டத்தின் பிரகாரம் இதுவரை எந்த அமைச்சரும் பதவி விலகவில்லை என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்த்தார்.
இன்று பாராளுமன்றத்தில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக குறிப்படுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் அழைப்பு விடுத்துள்ளார்.

 நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதியின் முயற்சியானது வெறுமனே அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பலனற்ற நடவடிக்கை என்றே தோன்றுவதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.இன்றைய பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

“அரசாங்கம் 'சங்கீதக்கதிரை' விளையாட்டு முட்டாள்த்தனமானது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உலகெங்கின் ஏனைய நாடுகள் செய்வது போல், இலங்கையிலும் கருத்து சுதந்திரம், அமைதியான கருத்து வெளிப்பாடு மற்றும் ஒன்றுகூடல் ஆகியவற்றை மதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் எவருக்கும் அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி