அலவத்துகொடையில் உள்ள

வரலாற்றுச் சிறப்புமிக்க சமன் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, பூஜைக்குரிய ஆபரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆலயத்தின்  கதவைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பிகளை உடைத்துக்கொண்டு திருடர்கள் நுழைந்துள்ளதாகவும் நேற்றிரவு முன்தினமிரவு (24)  10:00 மணியளவில் சுற்றுலாப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக் குறிப்பேட்டில் குறிப்புகளைப் பதிவுசெய்து அதன் பின்னரே திருடர்கள் நுழைந்ததாக நம்புவதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்தனர்.
 
வரகம்ப மன்னன் காலத்தைச் சேர்ந்த 700 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் இதற்கு முன்னர் பல தடவைகள் திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
 
அலவத்துகொட சமன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே குலதுங்க பண்டார தெரிவிக்கையில், ஆலயத்தின் ஆபரணங்கள் மற்றும்  கலைப்பொருட்கள்,  பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதால், வருடாந்த எசல பெரஹராவை ஆலயத்தில் நடத்துவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பஸ்நாயக்க நிலமே தெரிவித்துள்ளார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி