அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நேற்று (24) கொழும்பில் இரண்டு இடங்களில் 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு தொடர்பில் விசேட கலந்துரையாடலை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அரசாங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் 18 பேர் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்   லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மொட்டுச் சின்னத்தை வழங்கினால் ஏற்படும் நிலைமை குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தருணத்தில் தற்போதைய ஜனாதிபதி தரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்குவதற்கு இரு கட்சிகளின் இறுதி உடன்படிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம், அரசியல் அலுவலகம் அமைத்தல், வாக்களிப்பு நிலையத்தில் முகவர்களை நியமித்தல், ஊடகச் செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்ற விடயங்களில் இரு தரப்பினரும் அதிக கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆதரவை வழங்குவது தொடர்பில் விரிவான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதுதவிர, அரசால் தொடங்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க, தொகுதி அளவில் முறையான பொறிமுறையை அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி