முல்லைத்தீவு கல்விளான்

பகுதியில் இன்று (24) இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விவசாயி வயலுக்குச் சென்று கொண்டிருந்தபோதே அவர் சுடப்பட்டுள்ளார்.
 
பலத்த காயங்களுக்கு உள்ளானவரை அயல் விவசாயிகள் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 
 
கல்விலான் பகுதி விவசாயிகள் அமைப்பின் செயலாளரே துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.
 
மேலும் அப்பகுதியில் மணல் கடத்தல்காரர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கும் மணல் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 
 
எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை தெரிய வரவில்லை. 
 
முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி