மக்கள் விடுதலை முன்னணியின்

மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்து காரணமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஹட்சனை நாட்டை விட்டு வெளியேற விடமாட்டேன் என்றும் அவருக்கு மறைந்து கொள்ள இடமில்லை என்றும் வசந்த சமரசிங்கவின் மிரட்டல் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் முடிந்து நாட்டை விட்டு வெளியேறினால் அந்த நாடுகளில் உள்ள எமது கட்சியின் பிரதிநிதிகள் அவரைப் பார்த்துக் கொள்வார்கள் என வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
 
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு இவ்வாறான அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் ஜே.வி.பியிடம் கோரிக்கை விடுக்கிறேன்.
 
ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க முடியுமென்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி