அதுருகிரிய பச்சை குத்தும்

மையத்தில் வைத்து கொல்லப்பட்ட கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சய் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்க நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளார்.

இன்று (22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படடபோதே இந்த அனுமதியைக் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சந்தேக நபர் துலான் சஞ்சய் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் ஜயவர்தன, தனது கட்சிக்காரர் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க விரும்புவதாக நீதிமன்றில் அறிவித்தார்.

இதன்போது, நீதிவான் திருமதி சனிமா விஜேபண்டார,   இரகசிய வாக்குமூலத்தை வழங்கும் போது நீதிமன்றின் நிபந்தனைகள் குறித்து சந்தேக நபரிடம் தெரிவித்ததுடன் அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்க இணங்கினால் இன்று இடைவேளையின் பின்னர் சந்தேக நபர் இரகசிய வாக்குமூலத்தை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்படி இடைவேளையின் பின்னர் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி