நூருல் ஹுதா உமர்

கவிதை நூலுக்கும், வரலாற்றுக்கும்
தொடர்புபடுத்த கூடாது என்று கருத்துக்கள் வந்தாலும் பல காவியங்கள் வரலாறாகி இருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். "அந்த கல்முனைக்குடி நாட்கள்" எனும் உங்களின் கவிதை நூலின் தலைப்பு மாற்றப்பட வேண்டும் என கல்முனையில் தலைமை பீடமான முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் உட்பட ஏனைய ஜும்ஆ பள்ளிவாசல்கள், உலமா சபையினர், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள் உங்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்.
 
எனவே இந்த நூல் வெளியீட்டில் நான் கலந்து கொள்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை மதிக்காத, கல்முனை மண்ணின் மாண்பில் அக்கறை கொள்ளாத ஒருவன் என்று கல்முனை மக்கள் என்னை பிழையாக எண்ணி விடுவார்கள் என தெரிவித்து ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
 
மரியாதைக்குரிய நிஸாம் காரியப்பர் அவர்களே என்று ஆரம்பிக்கும் அந்த கடிதத்தில், உங்களின் கவிதை நூல் வெளியீட்டுக்கான அழைப்பிதழ் என்னை வந்தடைந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் எமது ஜனநாயக பேரியக்கத்தின் பொதுச்செயலாளரான, இலங்கை சட்டத்துறை ஆளுமையான, புகழ்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணியான, கல்முனையின் புத்திஜீவியான உங்களின் அழைப்பை மதித்து உங்கள் நிகழ்வில் கலந்துகொள்ள நான் விருப்பம் கொண்டிருந்தேன்.
 
ஆனாலும் உங்கள் "அந்த கல்முனைக்குடி நாட்கள்" எனும் கவிதை நூலின் தலைப்பு எனக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளதை உங்களுக்கு தெரிவித்து கொள்வதுடன் அந்த தலைப்பில் நான் உடன்பாடற்றவனாக இருப்பதையும் அறியத்தருகிறேன்.
 
கல்முனை பிராந்தியத்தில் பல தசாப்தங்கள் கடந்து சர்ச்சையாக நீடித்துவரும் ஒரு விடயம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகளாக நிலுவையில் நீடித்து வரும் சூழ்நிலையில் கல்முனை தாயின் பெருமையை இந்த தலைப்பு மழுங்கடித்து விடுமோ என்ற கவலை உங்களின் அழைப்பிதழை கண்ட நிமிடம் முதல் என்னுள் குடிகொண்டிருக்கிறது.
கவிதை நூலுக்கும், வரலாற்றுக்கும் தொடர்புபடுத்த கூடாது என்று கருத்துக்கள் வந்தாலும் பல காவியங்கள் வரலாறாகியிருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
 
"அந்த கல்முனைக்குடி நாட்கள்" எனும் உங்களின் கவிதை நூலின் தலைப்பு மாற்றப்பட வேண்டும் என கல்முனையில் தலைமை பீடமான முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் உட்பட ஏனைய ஜும்ஆ பள்ளிவாசல்கள், உலமா சபையினர், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள் உங்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்.
எனவே இந்த நூல் வெளியீட்டில் நான் கலந்து கொள்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை மதிக்காத, கல்முனை மண்ணின் மாண்பில் அக்கறை கொள்ளாத ஒருவன் என்று கல்முனை மக்கள் என்னை பிழையாக எண்ணி விடுவார்கள்.
உங்களின் நூல் வெளியீட்டில் கலந்து கொள்வதனூடாக கல்முனை மண்ணின் நீண்ட, நெடிய வரலாற்றையும், தொன்மையையும், புகழையும், கௌரவத்தையும் நான் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி