பிரபல சிங்கள நடிகரும் முன்னாள்

நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின் அறக்கட்டளை நிலையம்  மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 

இதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ( 23) காலை 09.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கொழும்பு BMICH இல் உள்ள லோட்டஸ் மண்டபத்தில் மடிக்கணினிகள் விநியோகிக்கப்படும்.
 
ரஞ்சன் ராமநாயக்க அறக்கட்டளையின் இலவச மடிக்கணினி நன்கொடை அமெரிக்காவில் வசிக்கும் ஹேரத்தின் என்பவரின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது.
 
மடிக்கணினிகள் தேவைப்படும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை 077 362 4927 என்ற எண்ணுக்கு WhatsApp ஊடாக அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
2023 ஆம் ஆண்டு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, வர்த்தகர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் உட்பட அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை சமூகத்தின் ஆதரவுடன் இதேபோன்ற மடிக்கணினி நன்கொடை வழங்கும் நிகழ்வை நடத்தினார்.
 
ரஞ்சன் ராமநாயக்க இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்காவில் தங்கியிருந்தபோது சுமார் 500 மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
Ranjan Laptop
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி