இலஞ்சக் குற்றச்சாட்டு: இரு
பொலிஸாரும் பிணையில் விடுதலை!
இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களுக்கு 25,000 ரூபா ரொக்கப் பிணைகள் இரண்டும் தலா பத்து இலட்சம் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளும் வழங்க உத்தரவிட்ட நீதிவான் வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.
பொலிஸ் பரிசோதகர் லசந்த தர்மரத்ன மற்றும் கான்ஸ்டபிள் ஹசித் டெவின் ஆகியோரையே பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பெற்றுக் கொண்ட பணம் இலஞ்சம் அல்ல எனவும் பணமோசடி வழக்கு ஒன்றில் சாட்சியமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சய் கமகே தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆரம்பக் கட்ட விசாரணை முடிந்து விட்டதாக நீதிமன்றத்துக்கு அறிவித்ததையடுத்து பிணை வழங்கி உத்தரவிட்டது.