தேசபந்து தென்னகோனை
பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா என்பதும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சிலர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.