அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கிளப் வசந்த தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் நாடு முழுவதும் கடனாளியாக இருந்தார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
அவர் இறக்கும்போது வறுமையில் வாடியதாகவும் தெரிய வந்துள்ளது.
கிளப் வசந்த ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டன.
எவ்வாறாயினும், அவரது தொழில்துறை பின்னடைவைக் கண்டதால் அவர் கடனாளியாக வாழ்ந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் மாத்திரமே கைது செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.