முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ராஜபக்க்ஷ 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியின் சிறப்புரிமையின் கீழ் விமானப்படையின்   ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி 978 உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது ஐந்து வருட காலப்பகுதியில் 557 விமான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமையின் கீழ் இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

'டெய்லி மிரர்' நாளிதழ் இது தொடர்பான தகவல்களை முதலில் விமானப்படைத் தலைமையகத்திடம் கோரிய போதிலும் விமானப்படை தகவல் வழங்கத் தவறியுள்ளது.

பின்னர், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் அவர்களது சகோதர பத்திரிகையான 'அத' செய்த முறையீட்டுக்குப பதிலளிக்கும் வகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் செய்யப்பட்ட முறையீட்டின்படி, 04.01.2024 அன்று மேல்முறையீட்டு எண். RTIC/Appeal/398/2023 இன் கீழ் தகவல் அறியும் ஆணைக்குழு விமானப்படைத் தலைமையகத்துக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து ஜூலை 11, 2024 அன்று தகவல் வழங்கப்பட்டதாலும் கோரப்பட்ட தகவலின் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் சிறப்புரிமையின் கீழ் தனது நிர்வாகத்தின் ஐந்து வருட காலப்பகுதியில் 557  தடவைகள் விமான சேவைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உள்நாட்டு விமானங்கள் மூலம் அவர் மொத்தம் 131,277.17 கிமீ தூரம் பயணித்துள்ளார்.

ஒப்பீட்டளவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிர்வாகத்தின் போது விமானப்படை ஹெலிகொப்டர்களை அதிகளவில் பயன்படுத்தினார், இது ஆண்டுக்கு சராசரியாக 111 விமானங்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது, இது ராஜபக்க்ஷவின் ஆண்டு சராசரியான 88 ஐ விஞ்சியது


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி