கிராம உத்தியோகத்தர் பரீட்சையில்
சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய பட்டதாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உடதும்பர பொலிஸார் தெரிவித்தனர்.
ஹுன்னஸ்கிரிய ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த பிலிப் நக்மா என்ற யுவதியே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது.
தெல்தெனிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உடதும்பர மரண விசாரணை அதிகாரி சமாதான நீதிவான் பி.கே. அபேரத்னவினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையின் போது உயிரிழந்த யுவதியின் தந்தை சாட்சியமளிக்கையில்,
“எனது மகள் ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்தார். அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். பட்டப்படிப்பை முடித்து கிராம அதிகாரி பரீட்சையில் தோற்றி கிராம அதிகாரி பரீட்சையில் சித்தியடைந்து மெததும்பர பிரதேச செயலகத்துக்கு நியமனம் செய்யப்பட்டார் என தெரிவித்தார்.
தெல்தெனிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.எம்.ஆர். அனுருத்த ரத்நாயக்க மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன் மூளையில் கட்டி வெடித்து இரத்தம் கசிவதால் இந்த மரணம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.