எஸ்.எம்.எம்.முர்ஷித் 

தனது மகன் நூறு ரூபா பணத்தை

திருடினான் என்ற குற்றத்துக்காக தந்தையினால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவை சேரந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன்  ஒருவன் தனது தந்தையின் நூறு ரூபா பணத்தை  திருடி செலவிட்டார் என்ற குற்றத்துக்காகவே தகப்பனால்  இவ்வாறு சூடு வைக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில் அடுத்தநாள் பாடசாலைக்கு செல்ல முடியாது என்றும் தனக்கு கை வலிப்பதாகவும் மகன் கூறிய நிலையில் பாடசாலைக்கு செல்லாவிட்டால் மீண்டும் சூடு வைப்பேன் என்று அச்சுறுத்தியதில் சிறுவன் பாடசாலை சென்றுள்ளான்.

இந்நிலையில், செவ்வாய்க்கழமை பாடசாலையில் மாணவன் கவலையாக இருந்த நிலையில் வகுப்பாசிரியர் மாணவனை விசாரித்த போது மாணவன் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளான்.

மாணவனின் நிலையை அறிந்த பாடசாலை நிருவாகம்  வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அழைத்துச் சென்று முறையிட்டதன் பின்னர் வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியது.

இதனையடுத்து மாணவனின் தந்தை கைது செயயப்பட்டு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுததப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி