பாராளுமன்ற உறுப்பினர்

தயாசிறி ஜயசேகர தலைமையிலான "மனிதநேய மக்கள் கூட்டணி" கட்சியின் பிரதிநிதிகள் குழுவுக.கும் ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் இன்று (16) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பங்கேற்காவிட்டாலும், அவரது ஆலோசனையின் பேரில் மனிதநேய மக்கள் ஒன்றியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

IMG 20240716 180944 800 x 533 pixel

ஐக்கிய மக்கள் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் சுஜீவ சேனசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் சிரேஷ்ட ஆலோசகர் லக்க்ஷமன் பொன்சேகா ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.

IMG 20240716 180917 800 x 533 pixel

மிகவும் சிநேகபூர்வமான இந்த கலந்துரையாடலின்போது ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க “மனிதநேய மக்கள் முன்னணி” பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச, சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இலங்கை மக்களின் ஆசியுடன் ஜனாதிபதியாக வருவார் என ரஞ்சித் மத்தும பண்டார இங்கு வலியுறுத்தியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி