அதுருகிரியில் உள்ள பச்சை குத்தும்

மையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தவின் உடலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டாம் என பொரளையில் உள்ள பிரபல தனியார் மலர்ச்சாலை நிறுவனத்துக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 ஆம் திகதி இரவு கஞ்சிபான இம்ரான் என கூறிக் கொள்ளும் நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மலர்சாலையை அச்சுறுத்தியுள்ளார்.
 
மாகந்துறை மதூஷை கைது செய்ய பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கிய முதல் நபர் கிளப் வசந்த என அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டதாக கஞ்சிபான இம்ரான் கூறியதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மதூஷிடம் விசாரணை நடத்திய கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் மேற்கு வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளும் கொல்லப்படுவார்கள் என கஞ்சிபான இம்ரான் கூறியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
 
அதன்படி பொரளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
சம்பந்தப்பட்ட மலர்சாலை அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி