குருணாகல் மாவட்டத்தின் பிங்கிரிய

பிரதேசத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட்  கலந்து கொண்டார்.

வடமேல் மாகாணத்தை சகல வளங்களும் பொருந்திய, பொருளாதார மேம்பாடு கொண்ட மாகாணமாக மாற்றியமைக்கும் ஆளுனர் நஸீர் அஹமதின் அயராத முயற்சிகளுக்கான ஓர் அங்கீகாரமாக இந்த ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேசத்தில் புதிதாக ஒரு பாரிய ஆடைத்தொழிற்சாலையும் இன்று ஜனாதிபதி மற்றும்  ஆளுனர் ஆகியோரின் பங்கேற்புடன் திறந்து  வைக்கப்பட்டன.

IMG 20240712 200912 800 x 533 pixel

பிங்கிரிய ஏற்றுமதி வலய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் முதலீட்டுச் சபை மற்றும் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது வடமேல் மாகாணத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கான செயற்திட்டங்கள் குறித்து ஆளுனர் நஸீர் அஹமட் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் முதலீட்டு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, ஊடகத்துறை ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் இலங்கை முதலீட்டுச்சபையின் அதிகாரிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி