அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன

பொறியியலாளர் மற்றும் அவரது சாரதியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று (11) உத்தரவிட்டார். 

பொறியியலாளர் மஹ்முது ஹனிபா அகீல் அஹமட் மற்றும் மேற்படி காரியாலயத்தின் அலுவலக சாரதி அப்துல்லா  ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பித்ததுடன், பிராந்திய பொறியாளர் அலுவலகத்துக்கு குளங்கள் மற்றும் வயல்வெளிகளில் மணல் மற்றும் மண் தோண்டுவது சட்டவிரோதமானது என்பதனால் இந்த விடயத்தில்  அரச அலுவலக அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதற்காகவே  இலஞ்சம் வழங்கப்பட்டதாக தெரிவித்தது.
 
விசாரணை முடிவடையாததால், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கயையடுத்தே விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி