பால் புரையேறிதில் பாதிக்கப்பட்ட

2 மாதக் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அந்தக் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மாத்தறை மாவட்ட புதிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தையே இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் இதனால் மாத்தறை கம்புருகமுவ பிரதேசத்தை சேர்ந்த இரட்டையர்களில் மூத்தவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
நேற்றுக் (03) காலை இந்தக குழந்தைக்கு பால் கொடுக்கப்பட்டபோது  பால் புரையேறியதால் பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை முச்சக்கரவண்டியில்
மாத்தறை மாவட்ட புதிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
 
இதன்போது, குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவசர சிகிச்சைப் பிரிவு செயற்படவில்லை என்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கூறியதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
 
பின்னர் 10 கிலோமீற்றர் தூரம் சென்று குழந்தையை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் அதற்குள் சிசு இறந்துவிட்டதாகவும் 30 நிமிடங்களுக்கு முன்னதாக குழந்தையை கொண்டு வந்திருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மாத்தறை பொது மயானத்தில் நேற்று மாலை சிசுவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி