எலதெனியா நுகவெல பாடசாலைச்
சந்தி வீதியில் பயணித்த லொறி ஒன்று வீதி ஓரத்தில் நின்றிருந்ந மாணவர்களை மோதியதில் காயமடைந்த 6 மாணவர்கள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
11 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே காயமடைந்தனர். இவர்களில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு தாயும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து குருணாகல் பிரதான வீதியில் நுகவெல பாடசாலைச் சந்தியில் எலதெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக எலதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.