குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்
தடுப்பில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக்கட்டா' என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 29ஆம் திகதி மேலதிக விசாரணைக்காக எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .
இந்த வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குற்றம்சாட்டப்பட்ட ஹரக் கட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, வழக்கின் விசாரணைக்கு முந்தைய மாநாட்டுக்கு ஜூலை 29 திகதியை நிர்ணயித்தார்.