திருகோணமலை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாக இருந்த இடத்துக்கு, விருப்புரிமைப் பட்டியலில் அடுத்த வேட்பாளராக இருந்த கதிரவேலு சண்முகம் குகதாசன், தேர்தல் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 64(2)இன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் நேற்று (02) வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட அமைப்பின் தலைவராக குகதாசன் செயற்பட்டு வருகிறார்.