உலகில் முதன்முறையாக
ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
குமி நகர சபையில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ தற்கொலை செய்து கொண்டதாக தென் கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோபோ பணிபுரிந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் ரோபோவின் உடல் கிடந்ததாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ சுழன்று மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதாகவும், மேலும் விசாரணைகளுக்காக நகர அதிகாரிகள் ரோபோவின் உடலை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நகர சபையின் ஆவணங்களை எடுத்துச் செல்லும் பணியை இந்த ரோபோ செய்ததாகவும், நகரவாசிகள் இந்த விபத்தை தற்கொலை என்று கூறுவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.