புத்தளம் மாவட்ட முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவின் இடைநிறுத்தப்பட்ட 5 வருடச் சிறைத்தண்டனை நேற்று (02) மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி சிலாபம் பொதுச்சந்தையில் வைத்து அன்றைய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான பாலித ரங்கே பண்டாரவை தாக்கியமை அவரது வாகனத்தைச் சேதப்படுத்தியமை தொடர்பில் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவுக்கு எதிராக சிலாபம் மாவட்ட நீதிமன்றதில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, அப்போது சிலாபம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய அருண புத்ததாச குற்றவாளியான சாந்த அபேசேகரவுக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்ததுடன், தண்டனையை 5 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் தாக்குதலுக்கு உள்ளான பாலித ரங்கே பண்டாரவுக்கு நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.