திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் ஆர்.சம்பந்தன் காலமானதால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அவரது மறைவுக்காக சபையின் துயரத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இரங்கல் தீர்மானம் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அஞ்சலி செலுத்தும் முகமாக பாராளுமன்றத்தின் பிரதான வாயிலுக்கு அடுத்துள்ள விழா மண்டபத்தில் நாளை மறுதினம் (04) பிற்பகல் 2.00 மணி மாலை 4.00 மணி வரை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.