மஹிந்த ராஜபக்க்ஷ தனது தந்தையோ
அல்லது கோட்டாபய ராஜபக்க்ஷ எனது மாமாவோ இல்லை எனவும் நான் கொள்வனவு செய்த கார் கோட்டாபய ராஜபக்க்ஷவினால் முன்னர் பயன்படுத்தப்பட்டமைக்கு தாம் பொறுப்பல்ல எனவும் பிரபல மொடல் அழகி பியுமி ஹன்சமாலி நேற்று (1) தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே பியுமி ஹன்சமாலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பியுமி ஹன்சமாலி ரேஞ்ச் ரோவர் வாகனம் மற்றும் கொழும்பில் நவீன வீடு வாங்கியமை ஒட்டுமொத்த இலங்கைக்கே பிரச்சினையாகி விட்டதாகவும் க்ரீம் தயாரிக்கும் சிலர் பணம் கொடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் அவர் கூறினார்.
ரேஞ்ச் ரோவர் வாகனத்தை கொள்வனவு செய்ததன் பின்னர், பழிவாங்கும் நோக்கில் கோட்டாபய ராஜபக்க்ஷவின் வாகனங்களை கொள்வனவு செய்ததாக தமக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.
தன்னைப் போன்ற அப்பாவித்தனமாக வர்த்தகம் செய்யும் ஒருவரைக் குற்றம் சாட்டுவது பாவம். அந்தச் செயலுக்கு மேலே உள்ள கடவுள் அவரைத் தண்டிப்பான்.
குற்றமே செய்யாததால் தான் பொலிஸுக்கு பயப்படாமல் வந்ததாக கூறிய பியுமி, தொழிலில் குற்றம் செய்திருந்தால் பயத்துடனும் நடுக்கத்துடனும் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
இது போன்ற பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்த்ததால் தான் அனைத்து தொழில் கொடுக்கல் வாங்கல்களையும் வங்கிகள் மூலம் செய்ததாகவும் ஹன்சமாலி தெரிவித்தார்.