நாட்டுக்காக நான் செய்த சில

விடயங்களை மறந்தாலும் நாட்டு மக்கள் அவற்றை நினைவு கூருவார்கள் என நினைப்பது நகைப்புக்குரியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

தனது 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தனது முகநூல் கணக்கில் அவர் பதிவில் கூறுகிறார்.

“இன்று நான் இந்த பூமியில் எழுபத்தொன்பதாவது வயதைக் கடந்து எண்பது வயதை எட்டியுள்ளேன்.எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் பல விஷயங்களைச் செய்திருக்கிறேன்.

நான் பல விஷயங்களை மறந்திருக்கலாம். அவற்றில் சிலவற்றை நான் மறந்துவிட்டேன் என்றால், நாட்டு மக்கள் அவற்றை நினைவில் வைத்திருப்பார்கள் என்பது எண்ணுவது நகைப்புக்குரியது.

ஆனால் அன்று முழுவதும் எனக்கு கிடைத்த வாழ்த்துக்களில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் என்னை நேசிக்கும் சிலரது நினைவுகள் எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியது.

 நான் செய்தது, சொன்னது எல்லாம் நினைவில் இல்லாவிட்டாலும், பலருக்கு இன்னும் நினைவில் இருக்கும் பொதுவான ஒன்று இருக்கிறது.

அதுவே இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் எனக்குள்ள உண்மையான அன்பு. அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

பல தசாப்தங்களாக பல விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் இருந்த போதிலும், நாட்டுக்கான எனது கடமையை நிறைவேற்றுவதற்கான வலிமையை உங்கள் அன்பே எனக்கு வழங்கியதாக இன்றும் நான் நம்புகிறேன். அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி