காட்டு யானைகள் கூட்டம்

மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்தின் கட்டிடங்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அருகில் உள்ள கடையையும் சேதப்படுத்தியுள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹகும்புக்கடவல பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறி நுழையும் காட்டு யானைக் கூட்டத்தினால் விவசாயப் பயிர்கள் நாசப்படுத்தப்படுவதுடன் தமது  இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த யானைக் கூட்டங்கள் வல்பாலுவ தேக்குமரக் காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தங்கி கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
தற்போது மஹகும்புக்கடை சிறு வனப் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் தங்கும் பழக்கம் உள்ளதாகவும் பலா, மாம்பழங்களின் விளைச்சல் காலம்  காரணமாக கிராமங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
எவ்வாறாயினும், இன்று (28) அதிகாலை காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்ததாகவும் அந்த யானை கடை ஒன்றைத் தாக்கிய போது, ​​பிரதேசவாசிகளால் விரட்டியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்தின் புதிதாக திறக்கப்பட்ட கட்டிடம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்ட அதேவேளை  கடை ஒன்றும் தாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி