இத்தாலியின் ரோம் நகரில்

பணிபுரியும் இலங்கைப் பெண்ணைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் கணவரின் சடலம் நேற்று முன்தினம் (26) மீட்கப்பட்டது.

இவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை பலமுறை கத்தியால் குத்திய கணவன், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை இத்தாலியில் கரீபியன் பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக இத்தாலியில் பணிபுரியும் எமில் ரோஹான் என்பவர் தெரிவித்துள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகறார்.

இலங்கையை சேர்ந்த கணவனும் மனைவியும் சில காலமாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதுடன் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

இலங்கைப் பெண் ஒருவர் இரத்தக் காயங்களுடன் வீதியில் ஓடியவாறு உதவி கோரி அலறிக் கொண்டிருந்ததைக் கண்ட இத்தாலியர்கள் சிலர் அவரை உடனடியாக 118 அம்பியூலன்ஸ் சேவை ஊடாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்ததாகவும் எமில் ரோஹான் மேலும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி