வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சுவிஸ் தூதுவர் விஜயம்
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால்
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால்
பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்ட அழுத்தங்களினால் மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்வதால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகளுக்கு
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மட்டக்களப்பு முழுவதும் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்
கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்தடையினால் இந்த தடவை கல்வி பொது தரா தர உயர் தர பரீட்சைக்கு தோற்றும்
சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 ஆண்டிலும், இலங்கை 2048 ஆண்டிலும் கொண்டாடவுள்ள
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது பதவியை நேற்று
தேர்தல் நடைபெற்றால் மீண்டும் நிராகரிக்கப்படுவோம் எனும் அச்சத்தினாலேயே அரசாங்கம் தேர்தலைப் பிற்போட எத்தனிக்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தல் குறித்து சமூகம் ஊடகத்துக்கு இன்று பிரத்தியேகமாக கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
மேலும் கருத்து தெரிவித்த கஜேந்திரன்,
உண்மையிலேயே பாராளுமன்றத் தேர்தல்தான் முதலில் நடைபெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் பாராளுமன்ற அடிப்படையில் மக்கள் வழங்கியிருக்கின்ற ஆணை, கடந்த வருடம் மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை வீட்டுக்கு அனுப்பியதுடன் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. அதன்படி அரசு ஓர் அங்கீகார,மற்ற செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் முற்றாக .நிராகரிக்கப்பட்ட ஒருவர். அவரது நியமனம் அரசியலமைப்பு ரீதியாக சரியாக இருந்தாலும், மக்களின் ஆணை அடிப்படையில் மக்கள் வெறுக்கும் ஒருவராகவே, நிராகரிக்கும் ஒருவராகவே காணப்படுகிறார். எனவே அங்கு ஒரு மாற்றம் உருவாக்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் அவர்களால் முன்னேற்றகரமான ஒரு விடயத்தை சிந்திக்கக்கூடியதாக இருக்கும்.
அந்த வகையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால் அதுதான் பொருத்தமானதாக இருந்திருக்கும்.
ஆனால் அரசாங்கம் அதனை செய்யாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் அழுத்தம் எதிர்த்தரப்புகளிடம் இருந்து வந்த பொழுது, அல்லது மக்கள் மத்தியில் இருந்து இவர்கள் மீதான வெறுப்பு அதிகளவு வெளிப்படுத்தப்பட்டபொழுது, அதனை சமாளிப்பதற்காக உள்ளுராட்சித் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் அறிவித்த பிறகும், பிரச்சனைகளை உருவாக்கி தேர்தலை பிற்போடும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதனை மக்கள் நன்றாக விளங்கிக்கொள்வார்கள். தேர்தல் நடைபெறும் பட்சத்தில் மக்கள் அதற்கான பாடத்தை படிப்பிப்பார்கள்.
அரசு அஞ்சுவதற்கான காரணம், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் முதுகில்தான் ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார். அவர்கள் பெருமளவு மக்களால் நிராகரிக்கப்படக்கூடிய ஓர் நிலை காணப்படுகிறது.
எனவே இந்த தேர்தல் நடைபெற்றால் மீண்டும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்கின்ற நிலை வெளிப்படுத்தப்பட்டுவிடும் என்கின்ற அச்சம் காரணமாகத்தான் இத் தேர்தலை நடத்த பின்னிற்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியவர் யார்? உங்கள் முன்னாள் தலைவர் கோட்டாபயவா? அதற்காகத்தான்