(பாறுக் ஷிஹான்)

கல்முனையில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று  தோற்கடிக்கப் பட்டிருக்கிறது அதேபோன்று இந்த கல்முனையில் சிலரை தூண்டிவிட்டு வெடிகளை போட்டு வெடிக்க வைத்த அரசியல்வாதியை  நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது. 
 
அரசியல் என்றால் ஒரு பக்குவம் இருக்க வேண்டும் நாங்கள் எமது மேடைகளில் எவரையும் தாக்கி பேசியதில்லை நாம் பிறந்த மண்ணை பாதுகாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம்  காங்கிரஸ் வேட்பாளர்  ரஹ்மத் மன்சூர்   தெரிவித்தார்.
 
நடைபெற்று முடிந்த 10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர்  இன்று (17) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
மேலும் அவர் தெரிவித்ததாவது
 
ஒவ்வொரு போராட்டமும் தனிநபருக்கானது அல்ல என   ஒவ்வொரு மேடைகளிலும் நான் கூறியுள்ளேன்.  இது கல்முனைக்கான ஒரு போராட்டம். 1994 ஆம் ஆண்டு இது போன்றதொரு போராட்டத்துக்கு முகம் கொடுத்து இருந்தபோது கல்முனை பகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின்  வாக்குகள் சூறையாடப்பட்டு அம்பாறையில் உள்ள சிங்கள வேட்பாளர்கள் அதிகளவில் தெரிவு செய்யப்பட்டனர். 
 
இதனை பல மேடைகளில் நான் கூறியது உண்மை இதனை யாவரும் அறிவீர்கள்.
 
அதேபோன்று தேசிய மக்கள் சக்தியைச்  சேர்ந்த  புகாரிக்கு ஆதரவு  தெரிவித்துவிட்டு இன்று தேர்தல் முடிவின் பின்னர் நான்கு சிங்கள வேட்பாளர்களை வெற்றி பெற  வைத்திருக்கிறார்கள்.
 
இவ்வாறான  செயற்பாடுகளை ஓர் அரசியல்வாதியே  முன்னெடுத்துள்ளார். எதிரி என்றால் நேராக மோத வேண்டும் ஜனநாயக ரீதியாக நடக்க வேண்டும்.  மக்களை சீரழிக்கின்ற ஒரு தீர்மானமாக எடுத்து நீங்கள் செய்த இந்த வேலை அதன் தாக்கம் மக்களுக்கே போய்ச் சேரும். 
 
கல்முனை என்பது எல்லோரையும் வாழவைத்த மண் இந்த மண்ணுக்கு துரோகம் செய்தவர்கள் யார் என்பதை மக்கள் தற்போது அறிந்திருக்கிறார்கள். இதற்குரிய பதிலை மக்கள் கொடுப்பார்கள். கொடுக்க வேண்டும் என்று நான் வினயமாக  கேட்டுக் கொள்கிறேன்.
 
தற்போதைய காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் மிக அவசியமானது. பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்த நிலையில் தற்போதைய காலத்தில் பாராளுமன்றத்தில்  முஸ்லிம் பிரதிநிதிகள்  22 பேர் இருக்க வேண்டும். 
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மரம் இங்கேதான் முளைத்தது. மர்ஹூம் எம்எச்சம் அஷ்ரபினால் இந்த மரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இங்கு வளர்கப்பட்டது ஆனால் இன்று கல்முனையில் தோற்கடிக்கப்பட்டு இருப்பது என்பது மிகவும் கவலையாக இருக்கின்றது.
 
இவ்வாறு கல்முனையில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இந்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
 
அதேபோன்று இந்த கல்முனையில் சிலரை தூண்டிவிட்டு வெடிகளை போட்டு வெடிக்க வைத்த அரசியல்வாதியை  நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. 
 
குரோத அரசியலில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். இவ்வாறான தீய அரசியல்வாதிகளை மக்கள் இனங்கான வேண்டும். இது தவிர முஸ்லிம் காங்கிரஸ் என்று பேரியக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. எமது மக்கள் அதனை  உறுதி செய்துள்ளனர் 

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்துக்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு  தற்போது தெரிவித்துள்ளது.

அதற்கப்பால் புதிதாக பெயரிடப்பட்டு தேசியப்பட்டியல் எம்.பி.க்களாக வேறு எவரும் பாராளுமன்றத்தில் பிரவேசிக்க முடியாது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி