கிளிநொச்சியில் எலிக் காய்ச்சல் நோய்க் காரணியான Leptospirosis பக்றிரீயா

தொற்றிய இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

காய்ச்சல் ஏற்பட்டாலோ அல்லது தசைநோ, கண் சிவத்தல், சுவாசப் பிரச்சனைகள் போன்றவை காணப்பட்டாலோ, உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு, பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இதைவிட, தற்போதைய பனியுடனான காலநிலையில் சளி அதிகரித்து நிமோனியா போன்ற காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனைவிட மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இவை குறித்தும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி