மொட்டுக்கு 4 வயதாகும்போது, ​​பசில் ராஜபக்ஷ வெளியில் இருந்து ஒரு அரசாங்கத்தை அமைத்தார்.நாடாளுமன்றம் செல்கிறீர்களா என்று யாராவது என்னிடம் கேட்டால், எனது தனிப்பட்ட பதில் இல்லை, இப்போது உள்ளே செல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் வெளியில் எங்கள் பணி இன்னும் முடிவடையவில்லை.

கொரோனா தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதா? எரிப்பதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியிடம் இன்று (03)  கேள்வி எழுப்பிய போது நாடாளுமன்றத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

நேற்று முன்தினம் (31) பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடைய நபரின் மரணத்தை கொரோனா மரணமாக கருத்திற் கொள்ளாமல் இருக்க தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தீர்மானித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றி உயிரிழந்த ஒருவரின் உறவினர் ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக   முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த குற்றச்சாட்டினை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மறுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்த பின்னர், அதாவது சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்குள் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக மாவை சேனாதிராசா நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் துணைத் தலைவர் சி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது, எதிர்வரும் 09 ஆம் திகதி அதிகாலை 05 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் கல்லெறியப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஊடக சமூகத்தையும், நீதியை மதிக்கும் சுதந்திர ஊடக இயக்கம் அரசாங்கத்திடம் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த 29ம் திகதி  நடந்த பயங்கரவாத தாக்குதலில் பிரான்சின் தெற்கு கடற்கரை நகரமான நீஸின் நோத்ர்-டாம் தேவாலயத்திற்குள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

துருக்கியின் இஸ்மிர் நகரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. துருக்கியின் ஈஜியான் கடலோர பகுதியிலும், கிரீஸின் சேமோஸ் தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல வீடுகள் சேதம் அடைந்தன. ஏராளமான உயிரிழப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அம்பாறை திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது மின்னல் தாக்கியதில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று (30) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி