இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தச் சூழ்நிலைகள் காரணமாக 2023 கடந்த ஒக்டோபர் 7 முதல் காசா பகுதியில் பலஸ்தீனியர்களின் மரண எண்ணிக்கை சுமார் 60
ஆயிரமாகப் பதிவாகியுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே காலகட்டத்தில் காயமடைந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 145,000 என்றும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இடிபாடுகளுக்கு அடியில் ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.