தெற்கு எகிப்தில்  சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரயில்கள் மோதியதில் 32 பேர் பலியானார்கள்  மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகிறது. ஏராளமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் "32 பேர் பலியானார்கள்  மற்றும் 66 பேர் காயமடைந்தனர்" என்று கூறினார். குறைந்தது 50 காயமடைந்தவர்கள் அருகிலுள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லபட்டு உள்ளனர் என கூறி உள்ளது.

எகிப்து வட ஆபிரிக்காவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ரெயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும்.

2017 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1,793 ரெயில் விபத்துக்கள் நடந்ததாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வருடத்திற்கு  முன்னதாக, மத்தியதரைக்கடல் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவுக்கு வெளியே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில்  43 பேர் பலியானார்கள். 2016 ஆம் ஆண்டில், கெய்ரோ அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர்.

கெய்ரோவிலிருந்து தெற்கு எகிப்துக்கு பயணித்த அதி வேக ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2002 ல் எகிப்தின் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி