அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துகின்றமைக்கு எதிராக 03 அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றில் இன்று சமர்பிக்க அவர்களது சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்படுவதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், போராட்டத்துக்கு ஆதரவளித்தவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது நியாயமற்ற செயல் எனவும் சட்டத்தரணி நுவான் போபகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலுள்ள முதலாவது இயந்திரத்தின் மின்சார உற்பத்தி பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் தபால் பொதிகள் இன்று(25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

அத்தியாவசிய சேவைகளுக்காக அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்படடுள்ளது.

இலங்கைக்கான கடன் சலுகை தொடர்பிலான நிலைப்பாட்டை தளர்த்துமாறு சீனாவிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானின்  Nikkei Asia இணையத்தளத்திற்கு கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்குள் முறையற்ற வகையில் பிரவேசித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 10 சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோருக்கு தமது கையடக்க தொலைபேசிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கம்பஹா – மாக்கவிட்ட,  குருச  சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (24) புதன்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 293 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதவி நிலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்

அரசாங்க ஊழியர்களை நாளை (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி