டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்கள் போதியளவு கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ), எரிபொருள் தட்டுப்பாடு குறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக மேலும் 9110 இலட்சம் ரூபா இழப்பீடு கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

மேலதிகமாக உள்ள எரிபொருளை எதிர்வரும் 03 நாட்களுக்குள் நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். 

நிர்மாணத்துறைக்கு தேவையான பல பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால், அத்துறை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இன்று முதல் 50 வீதத்திற்கும் குறைந்த அளவிலான பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்படலாமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.     

உலகின் அதிக ஊதியம் பெறும் டென்னிஸ் வீரர்களின் பட்டியலின் முதல் இடத்தை உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ரொஜர் பெடரர் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார்.

எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

சுமார் 3.8 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது இலங்கை பிரஜைகள் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் ஆஜராகாமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பினை சேர்ந்த லஹிரு வீரசேகர சட்டத்தரணிகள் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி