நடிகர் விஜய்யின் வாரிசு படம் இன்னும் சில தினங்களில் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ள நிலையில்

தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளன.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் துணிவு படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வைரலானது.

நடிகர் விஜய்யின் வாரிசு படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் வம்சி படிப்பள்ளி, இசையமைப்பாளர் தமன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், விடிவி கணேஷ், சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

படம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. விஜய்யின் வாய்சில் வெளியான ரஞ்சிதமே பாடல் அதிகமான வியூஸ்களை பெற்று பட்டையை கிளப்பி வருகிறது. தொடர்ந்து தீ தளபதி பாடலும் அதிகமான வியூஸ்களையும் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுள்ளன.

இதனிடையே இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ட்ரெயிலர் வெளியாகி ஒரு மணிநேரத்திலேயே 50 லட்சம் வியூஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அஜித்தின் துணிவு படத்தின் ட்ரெயிலர் ஒரு மணி நேரத்தில் 30 லட்சம் வியூஸ்களை பெற்ற நிலையில், தற்போது துணிவு ட்ரெயிலரை விஜய்யின் வாரிசு ட்ரெயிலர் விஞ்சியுள்ளது.

துணிவு மற்றும் வாரிசு படங்கள் ஒரே நேரத்தில் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன. விஜய் மற்றும் அஜித் படங்கள் நீண்ட காலங்களுக்கு பிறகு இவ்வாறு ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த்ரில்லர் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் என இருவேறு ஜானர்களில் இந்தப் படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், எந்தப் படம் ரசிகர்களை கவரும் என்று தற்போதே கோலிவுட்டில் பரபரப்பு காணப்படுகிறது.

மேலும் வாரிசு படத்தின் ட்ரெயிலர் வெளியாகி 2 மணிநேரத்திலேயே 10 லட்சம் லைக்ஸ்களையும் பெற்று அசத்தியுள்ளது. பிகில் மற்றும் பீஸ்ட் படங்களின் ட்ரெயிலர்களை போலவே தற்போது வாரிசு படத்தின் ட்ரெயிலரும் மிகவும் வேகமாக இந்த சாதனையை புரிந்துள்ளது. விஜய் என்றாலே மாஸ் தான் என்பதை அவரது ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி