Feature

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய உப தலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Feature

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை

Feature

இந்த வருடத்துக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் அடுத்த திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Feature

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான விசேட சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்த

Feature

இலங்கையில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றத் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் விலகுவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 3% உயர்வை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது, அந்தத் திட்டத்தின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளைத் தணித்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் புதிய அரசாங்கம், கடந்த மாதம் இத்திட்டம் தொடர்பில் குறைந்த கட்டணங்களைக் கோரியதைத் தொடர்ந்து, இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து வெளியேற அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆலைக்கு அரச ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அது தொடர்பான முடிவு காரணமாக இந்த விலகல் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அந்நிறுவனம் கூறியுள்ளது.

நிலத்தை விடுவிக்கும் போது எழுந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளாலும் இத்திட்டத்தின் எதிர்கால இலக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 1 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்ட திட்டங்களிலிருந்து மின்சார செலவைக் குறைக்க அதானி குழுமத்துடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக  இலங்கை அரசு தெரிவித்திருந்தது.

திட்ட முன்மொழிவு தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவையால் மற்றொரு குழு நியமிக்கப்பட்டதாக,  நிறுவனம் ஒரு கடிதத்தில் கூறியுள்ளது.

மேலும், குறித்த நிறுவனம் இலங்கையின் இறையாண்மை உரிமைகளையும் அதன் தேர்வுகளையும் முழுமையாக மதிக்கிறது என்றாலும், அந்த திட்டத்திலிருந்து மரியாதையுடன் விலகுவதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம், அதானி குழுமத்தின் பில்லியனர் நிறுவனர் கௌதம் அதானி மற்றும் பிற நிர்வாகிகள், இந்திய மின்சார விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இலஞ்சம் கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இலங்கை அதானி குழுமத்தின் உள்ளூர் திட்டங்களை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது. எனினும், அதானி தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.

இலங்கையின் மிகப் பெரிய துறைமுகமான கொழும்பில் 700 மில்லியன் டொலர் முனையத் திட்டத்தைக் கட்டுவதிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியின் போது முடக்கப்பட்ட மின் தடை மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் பணமில்லாது பாதிக்கப்பட்ட இலங்கை, தற்போது இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் செலவுகளில் ஏற்படும் அதிகரிப்பைத் தடுக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்த முயற்சித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Feature

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக அவரைப் பாதுகாக்கத் தயங்க


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி