கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்களில் இதுவரை 599 பேர் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் புதிய தவணைக்கான ஆளுநராக இன்று (30) காலை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவு பாதுகாப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருடத்திற்கான விசா கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி, ப்ளவர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன்கள்  வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொவிட் வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி