இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ப்ளெய் டுபாய் நிறுவனம் இலங்கைக்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை முற்றிலும் நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜூலை 12ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவித்தப்படி தாம் குறித்த நாளில் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு ரஷ்ய எரிபொருள் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதிநிதிகள் இன்று இலங்கை வந்துள்ளனர்.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

சில அமைப்புக்களின் தலைவர்கள், புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை உள்ளிட்ட சில பகுதிகளுக்குள் இன்று(07) பிரவேசிக்க தடை விதித்து, கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி