சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 ரஷ்யாவிடமிருந்து மேலும் மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் இல்லத்துக்கு முன்பாக ஒருசிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் இருப்புடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை எளிதாகக் கண்டறியும் வகையில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (13) குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் வழமை போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி