இலங்கை கடற்படையினரால் நேற்று (16) தலைமன்னார் உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல்

நடவடிக்கையின் மூலம் 04 கிலோவுக்கும் அதிகமான Crystal Methamphetamine (ICE), சுமார் 01 கிலோ ஹெரோயின் மற்றும் 05 கிலோவுக்கும் அதிகமான ஹஷிஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

 கடற்படையினர் நேற்று (16) அதிகாலை தலைமன்னார் கிராம பகுதி கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதோடு  கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனை செய்தனர்.

இதன் போது சுமார் 04 கிலோ மற்றும் 194 கிராம் எடையுள்ள கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன்  நான்கு பொதிகளும், 01 கிலோ மற்றும் 034 கிராம் எடையுள்ள ஹெரோயின் பொதியொன்று, சுமார் 05 கிலோ மற்றும் 254 கிராம் எடையுள்ள  ஹாஷிஸ் 5 பொதிகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 94 மில்லியன் ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.

கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் படகு  என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி