தனது மனைவியைக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த இலங்கையர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய

சிங்கப்பூர் பொலிஸார் இன்று (11) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எஷான் தாரக கோட்டகே என்ற 30 வயதுடைய நபரே தனது மனைவியை கெட்டோன்கேவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கொலை செய்துள்ளதாக சேனல் நியூஸ் ஏசியா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வந்தி மதுகா குமாரி என்ற பெண்ணே அங்கு உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (09) காலை 10.45க்கும் மாலை 4.42க்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஒரு வார காலம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொலையை செய்த நிலையில், சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பின்னர் பொலிஸார் ஹோட்டலின் அறையொன்றிலிருந்து 32 வயதுடைய பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

இந்த கொலையின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி