எட்டாவது தெரண லக்ஸ் திரைப்பட விருது வழங்கும் விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

அங்கு, 2023 ஆம் ஆண்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் அசோக ஹந்தகம இயக்கிய 'அல்பொரதா' திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை வென்றது.

நாட்டின் திரையுலக நட்சத்திரங்களை கௌரவிக்கும் 8வது தெரண லக்ஸ் சினிமா விருதுகள் வழங்கும் விழா அண்மையில் கொழும்பு தாமரை தடாக  அரங்கில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

அதில் சிறந்த நடிகைக்கான விருதை நைட் ரைடர் படத்திற்காக யுரேனி நோஷிகா பெற்றார்.

பிரபல நடிகருக்கான விருதினை நடிகர் ரஞ்சன் ராமநாயக்க பெற்றார்.

பிரபல நடிகைக்கான விருது நயனதாரா விக்கிரமாராச்சிக்கு கிடைத்தது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை தி கேம் திரைப்படத்திற்காக வசந்த குமாரவில பெற்றார்.

சிறந்த துணை நடிகைக்கான மூன்று விருதுகள் வழங்கப்பட்டன.

ரித்திகா கொடிதுவக்கு, ஆன் சோலன்ஹேட் மற்றும் நிமாயா ஹெரிஸ் ஆகியோர் அந்த விருதுகளைப் பெற்றனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி