உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைப் போன்று யுத்த காலத்தில் இடம்பெற்ற மீறல்கள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டமை

மற்றும் தாக்குதல்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள முடியும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, பாதுகாப்புச் சபை போன்றன சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் நிறுவனங்களாகக் காணப்படுகின்றன.

சூடான், கொங்கோ, புரூண்டி, மியான்மார் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பில் சர்வதேச குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பலருக்கு தண்டனைகளும் இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது, உரோம் கொள்கைச் சட்டத்தின் கீழ், இனப் படுகொலையை தடை செய்தல், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுவது போன்ற விஷயங்களை விசாரிக்க முடியும்.

இலங்கையானது, 2000ஆம் ஆண்டில் இந்த உரோம் சட்டத்தில் கையெழுத்திட்ட போதிலும் இதுவரையில் அதனை அங்கீகரிக்கவில்லை. அதனால் இலங்கைச் சட்டத்தின் படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இருப்பினும் அந்தத் தீர்மானங்கள் வேறு நாடுகளில் வைத்து அமல்படுத்தப்படலாம்.
 
உரோம் சட்டத்தை அங்கீகரிக்குமாறு கார்டினல் மற்றும் சரத் பொன்சேக்கா ஆகியோரால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சட்ட அலுவலகம் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் செய்யலாம். இதனை இணையதளம் ஊடாகவும் மேற்கொள்ளலாம். மேற்படி அலுவலகத்தின் ஊடாக எவரும் முறைப்பாடுகளை முன் வைக்கலாம். ஆனால் அந்த முறைப்பாடுகளுக்கான சாட்சியங்கள் முன்வைக்கப்பட வேண்டும். வதந்திகளை பரப்புவதால் பயனில்லை.
இலங்கையில் பேஸ்புக் மற்றும் பத்திரிகைகள் மூலமாக சர்வதேச விசாரணையைக் கோரி நிற்பதால் அது இடம்பெறப் போவதில்லை.

மேற்படி சர்வதேச விசாரணை செயல்முறையை இலங்கையின் சட்டத்துடன் எவ்வாறு இணைப்பது என்பதை அறிந்தவர்கள் கூறவேண்டும். அத்தகைய அனுமதியின்றி சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்த முடியாது.
மாறாக, சர்வதேச விசாரணை தேவை என்ற காரணத்தால் அது நடக்காது. அதை எப்படி செய்வது என்று சொல்லாமல் சர்வதேச விசாரணை தேவை என்று சொல்வது இன்னொரு வகை அரசியல். அதாவது, இலங்கையில் தற்போதுள்ள நிறுவன அமைப்புகளின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்வதாகும்.

உதாரணமாக, சுரேஷ் சலே அந்த நேரத்தில் இலங்கையில் இல்லை என்று சேனல் நான்கு வீடியோவை மறுத்தார். இதற்குப் பதிலளித்த சரத் பொன்சேகா, கடவுச்சீட்டில் உள்ள பதிவுகளை மாற்ற முடியும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது மிகவும் தீவிரமான நிலை. சுரேஷ் சலே போன்ற ஒருவருக்கு இவ்வளவு அதிகாரம் இருக்குமானால், இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்க வேண்டும்? அவர் இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் பல குற்றங்கள் நடந்துள்ளன. அது தொடர்பான ஆதாரங்களும் வலுக்கட்டாயமாக மறைக்கப்பட்டதா? இவ்வாறான அறிக்கைகள் சர்வதேச விசாரணையிலும் ஆராயப்பட வேண்டும்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி