ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக,
பஹனாகா ரயில் நிலைய பொறியாளர் அமிர் கானிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

(19) துணை பொறியாளர் வசித்து வந்த வீட்டிற்கும் அதிகாரிகள் சென்றபோது, அவர் அங்கு இல்லை. இதையடுத்து அந்த வீட்டிற்கு முற்றுகை வைக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த துணை பொறியாளர் விசாரணைக்கு வராது தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவாகி விட்டதாக ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின.

பஹனாகா ரயில் நிலைய ஊழியர் தலைமறைவானதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என தென்கிழக்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி அதித்ய குமார் சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கூறினார். பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.

மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, மாற்ற தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் மீது அதிவேகத்தில் மோதியது. இவ்விபத்தில் 292 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி