மலையக புகையிரத பாதையில் ஹட்டனுக்கும் நானு ஓயாவிற்கும் இடையிலான புகையிரத போக்குவரத்து இதுவரை வழமைக்கு

திரும்பவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரத பாதையில் கிரேட் வெஸ்டன் மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக நேற்று (12) பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

தடம் புரண்ட புகையிரத பாதை இதுவரை சீர்செய்யப்பட்டவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் மற்றும் பதுளையிலிருந்து நானுஓயா வரை பயணிக்கும் புகையிரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

புகையிரத நிலையங்களுக்கு இடையில் பேரூந்து மூலம் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி