வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம்

பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை இரவு (15) புளியங்குளம், புதூர் பகுதியில் உள்ள தனது வயல் காவலுக்கு சென்றுள்ளார்.

இன்று (16) காலை விடிந்தும் குறித்த இளைஞர் வீடு திரும்பாமையால் அவரது குடும்பத்தினர் குறித்த இளைஞரைத் தேடிச்சென்ற போது வயற் பகுதியில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜெகநாதன் கேஜிதன் என்பவராவார். குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞனின் மூத்த சகோதரர் புதூர் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் உழவு இயந்திரத்தில் கடக்கின்ற போது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு புகையிரதத்தில் உழவு இயந்திரம் மோதி அவரது நண்பருடன் மரணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி