அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியை 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் குறைந்தது 11,000
வீடுகளில் மின்தடை ஏற்பட்டது.
ஐரோப்பிய புவியியல் ஆய்வகம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் கூறியது. குவின்ஸ்லந்து மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கம் முதலில் 5.7 ரிக்டர் அளவில் இருந்ததாக அது சொன்னது.
எனினும், குவின்ஸ்லாந்தில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அவுஸ்திரேலிய வானிலை நிலையம் அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்தது.
குவின்ஸ்லாந்தின் எரிசக்தி விநியோக நிறுவனமான எனெர்ஜெக்ஸ் ஆஸ்திரேலிய ஒளிபரப்புக் கழகத்திடம் நிலநடுக்கம் காரணமாக ஏறக்குறைய 11,000 வீடுகளில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னது.
9,000க்கும் அதிகமானோர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் குறிப்பிட்டனர். பிரிஸ்பனிலிருந்து வடகிழக்கில் கிட்டத்தட்ட 170 கிலோமீட்டர் தூரத்தில் கில்கிவியன் புறநகர் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.